Current Affairs

ஜல் ஜீவன் மிஷனின் கீழ் நீர் விநியோகத்தை அளவிடுதல் மற்றும் கண்காணித்தல்


Daily Current Affairs in Tamil
ஜல் ஜீவன் மிஷனின் கீழ் நீர் விநியோகத்தை அளவிடுதல் மற்றும் கண்காணித்தல்

முக்கிய புள்ளிகள்

ஜல் ஜீவன் மிஷன், டிஜிட்டல் இந்தியா, ஆத்மா நிர்பர் பாரத் அபியான் மற்றும் மேக் இன் இந்தியா ஆகியவற்றின் கீழ் ஸ்மார்ட் கிராமப்புற நீர் விநியோக முறையை வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 2024 க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்தமான குழாய் நீர் இணைப்பை வழங்கும் நோக்கில் ஜல் ஜீவன் மிஷன் நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 55 லிட்டர் தண்ணீர் நீண்ட கால அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

சிறப்பம்சங்கள்:
அளவீடு மற்றும் கண்காணிப்பு பானி சமிதி மூலம் நடத்தப்பட உள்ளது.
பானி சமிதி என்றால் என்ன?
ஜல் ஜீவன் மிஷன் தேசிய அளவில், மாநில அளவில், மாவட்ட அளவில், கிராம அளவிலான குழுக்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பானி சமிதி கிராம மட்டத்தில் அல்லது கிராம பஞ்சாயத்து மட்டத்தில் இயங்கும் ஒன்றாகும். இது சுமார் 10-15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
இந்த குழுவில் 25% பஞ்சாயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமிருந்தும், 50% பெண்கள் மற்றும் 25% கிராமத்தின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஜல் ஜீவன் மிஷனின் கீழ் நீர் விநியோகத்தை அளவிடுதல் மற்றும் கண்காணித்தல்